இரைப்பை குடல் புற்றுநோய்
புற்றுநோய் செல்கள் முதலில் வளரத் தொடங்கும் இடத்தின் அடிப்படையில் மருத்துவர்கள் புற்றுநோயை வகைப்படுத்துகிறார்கள். இரைப்பை குடல் புற்றுநோய் (Gastrointestinal Cancer) அல்லது வயிற்றுப் புற்றுநோய் என்பது இரைப்பை குடல் பாதையில் (செரிமானப் பாதை) உருவாகும் புற்றுநோயாகும். இரைப்பை குடல் பாதை உணவுக்குழாய் (வாயிலிருந்து வயிற்றுக்கு உணவை எடுத்துச் செல்லும் குழாய்) தொடங்கி ஆசனவாயில் (உடலிலிருந்து கழிவுகள் வெளியேறும் இடத்தில்) முடிவடைகிறது. முதன்மையாக இரைப்பை குடல் புற்றுநோய் குடல் பாதையில் வளரத் தொடங்குகிறது.
வயிற்றுப் புற்றுநோய் எப்போதும் அதன் ஆரம்பக் கட்டங்களில் அறிகுறிகளை ஏற்படுத்தாது. புற்றுநோயின் பாதிப்பு ஆரம்பமாகும் பொழுது ஏற்படும் அறிகுறிகள் அஜீரணம் மற்றும் வயிற்றின் மேல் பகுதியில் வலி ஆகியவை. புற்றுநோய் முன்னேறும் (Advanced stage) வரை அறிகுறிகள் தோன்றாது. வயிற்றுப் புற்றுநோயின் பிற்கால நிலைகள் மிகவும் சோர்வாக உணர்தல், முயற்சி செய்யாமல் எடை குறைதல், இரத்த வாந்தி மற்றும் கறுப்பு மலம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம். “ பசியின்மை, சோர்வு, எடை குறைவு மூன்றும் மிகவும் கவனம் கொள்ள வேண்டிய அறிகுறிகள்.
இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டும். கறுப்பு மலம் அல்லது இரத்தக் கசிவு மிகவும் அபாயகரமான அறிகுறிகள் கூடுதல் கவனம் வேண்டும். ஒருவருக்கு உடம்பில் இரத்தம் குறைவாக இருக்கும் வேலையில் இம்மாதிரியான அறிகுறிகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் அது பெருங்குடல் புற்று நோயாக இருக்கலாம் (Colon Cancer). அது அல்லாது, புகைப் பழக்கம் உள்ளவர்கள் வயிற்றுப் புற்று நோயால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.” மருத்துவர் கபில் நாகராஜ், இரைப்பை குடல் மருத்துவர், பீகாக் மருத்துவமனை, திருத்தணி.
விழுங்குவதில் சிக்கல், வயிற்று வலி, சாப்பிட்ட பிறகு வீங்கிய உணர்வு, சிறிய அளவிலான உணவைச் சாப்பிட்ட பிறகு நிரம்பிய உணர்வு, பசியாக இருக்கும் என்று எதிர்பார்க்கும் போது பசி இல்லை உணர்வது, நெஞ்செரிச்சல், அஜீரணம், குமட்டல், வாந்தி, முயற்சி செய்யாமல் எடை குறைதல், மிகவும் சோர்வாக உணர்வது, கருப்பாகத் தோன்றும் மலம் போன்றவை வயிற்றுப் புற்றுநோயின் சில அறிகுறிகள் ஆகும்.
“இதில் கவனிக்க வேண்டிய விஷயம் பல நேரங்களில் வயிற்றுப் புற்றுநோயால் ஏற்படக்கூடிய அறிகுறிகளைப் போன்ற நிலைய நாம் கடக்க நேரிடும். எனவே வயிற்றுப் புற்றுநோயைப் பரிசோதிப்பதற்கு முன், உங்கள் மருத்துவரிடம் அதன் சம்பந்தப்பட்ட பிற காரணங்களை முதலில் சோதிக்கொள்தல் வேண்டும். உங்கள் மருத்துவர் உங்கள் மருத்துவ வரலாற்றை மதிப்பாய்வு செய்வார், உங்கள் அறிகுறிகளைப் பற்றிக் கேட்பார் மற்றும் உங்கள் வயிற்றில் உடல் பரிசோதனை செய்வார். வயிற்றுப் புற்றுநோயைக் கண்டறிந்து நிலைநிறுத்த அவர்கள் பல சோதனைகளுக்கு உத்தரவிடலாம். இப்படி ஒவ்வொரு நிலையிலும் மருத்துவருக்கு ஒத்துழைத்து பரிசோதனை செய்து கொள்ளுதல் வேண்டும்.” என்கிறார் மருத்துவர் கபில் நாகராஜ், இரைப்பை குடல் மருத்துவர், பீகாக் மருத்துவமனை, திருத்தணி.
புற்றுநோய் எவ்வளவு பரவியுள்ளது என்பதை மதிப்பிட மருத்துவர்கள் ஸ்டேஜிங் (Staging) பரிசோதனை செய்வார்கள். வயிற்றுப் புற்றுநோயுடன், நிலை பூஜ்ஜியம் (0) முதல் நான்கு (IV) வரை இருக்கும். நிலை 0 என்றால் புற்றுநோய் உங்கள் வயிற்றுப் புறணிக்கு அப்பால் பரவவில்லை, நிலை IV என்றால் அது மற்ற உறுப்புகளுக்கும் பரவி இருக்கிறது என அர்த்தம். வயிற்றுப் புற்றுநோயைக் கண்டறிய மேல் எண்டோஸ்கோபி (Upper Endoscopy) பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.
“உங்கள் ஸ்கேன் நிபுணர் அல்லது மருத்துவர் ஒரு மெல்லிய குழாயை அதன் நுனியில் (எண்டோஸ்கோப்) ஒரு சிறிய கேமராவுடன் உங்கள் வயிற்றை அடையும் வரை உங்கள் வாயில் செருகுவார். சிறிய அறுவை சிகிச்சை கருவிகளும் எண்டோஸ்கோப் வழியாகச் செல்லலாம், இது உங்கள் மருத்துவரைத் திசு மாதிரியை (biopsy) அகற்ற அனுமதிக்கிறது. புற்றுநோய் உயிரணுக்களுக்கான மாதிரியை ஆய்வகத்தில் சோதிக்கலாம்.” என்கிறார் மருத்துவர் கபில் நாகராஜ், இரைப்பை குடல் மருத்துவர், பீகாக் மருத்துவமனை, திருத்தணி.
புற்று நோய் கட்டியை எளிதில் அடையும் போது, அறுவை சிகிச்சை அவசியமாக இருக்கலாம். அதை அடைவது கடினமாக இருக்கும்போது அல்லது அதை அகற்றுவது இரைப்பை குடல் செயல்பாட்டைப் பாதிக்கும் பொழுதில் கீமோதெரபி (chemotherapy), கதிர்வீச்சு சிகிச்சை (radiation therapy), அல்லது இலக்கு சிகிச்சையை (targeted therapy) முதலில் முயற்சி செய்யப்படுகிறது.
அறுவைசிகிச்சை என்பது சுற்றியுள்ள திசுக்களுடன் கட்டியை முழுமையாக அகற்றுவதை. உணவுக்குழாய் அல்லது வயிற்றின் செயல்பாட்டை மீட்டெடுக்க, உறுப்பின் மீதமுள்ள ஆரோக்கியமான பகுதிகளை இணைக்க அனஸ்டோமோசிஸ் (anastomosis) எனப்படும் ஒரு செயல்முறை செய்யப்படும். சில கல்லீரல் புற்றுநோயாளிகள் மாற்று அறுவை சிகிச்சைக்குத் தகுதியுடையவர்களாக இருக்கலாம்.
திறம்பட சிகிச்சையளிக்க முடியாத இரைப்பை குடல் புற்றுநோயின் மிகவும் மேம்பட்ட நிகழ்வுகளுக்கு, நோயைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக அறிகுறிகளைக் குறைப்பதை மருத்துவர்கள் நோக்கமாகக் கொள்வதுண்டு.