இது பெருமான்மையான வீடுகளில் பெரியோர்கள் கூறும் ஒரு சாதாரண வரி. ஆனால் குழந்தைகள் என்றால் அடம் பிடிப்பது அவர்களின் முதன்மை குணமா?
குழந்தைகளின் நடத்தைகளைக் கொண்டு அவர்களின் மனநிலையை அறிய முடியுமா? அதனை சீர்திருத்த முடியுமா?
ஒரு குழந்தை தன்னை உணர்ந்து தனது நாங்கு வயது முதல் அது பக்குவமடைய தொடங்குகிறது. இன்னிலையில் அந்த வயது தொடங்கி பெற்றோர்களுக்கு அந்த பிள்ளைகளின் நடத்தைகளை கண்கானிக்கும் பொருப்பும் தொடங்குகிறது. நாம் சில குழந்தைகளை பார்த்திருப்போம், அவர்கள் சிறு வயது தொட்டு எல்லாவற்றிலும் அதிகம் ஆர்வமாக இருப்பார்கள். அவர்களிடத்தில் ஒரு கேள்வி கேட்டால் அதை நாம் முடிப்பதற்குள் பதில் வந்து விடும். இது அந்த குழந்தை எல்லாவற்றிலும் ஆர்வமாக இருக்கிறது என்பதையும் தான்டி, ஒரு வகையில் அந்த குழந்தை உங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக செய்யும் செயலாகவும் இருக்கலாம். இப்படி இருக்கும் அந்த குழந்தைகளின் செயல் நாளடைவில் அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு, ( Attention Deficit Hyperactivity Disorder) ஏ.டி.ஹச்.டி எனமாறலாம்.
பெரும்பாலும் ஏழு முதல் பத்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், இது போன்ற ஆட்டிசம் (Autism) அல்லது ஏ.டி.ஹச்.டி அல்லது எத்திர்ப்பை எதிர்க்கும் கோளாறு (Oppositional Defiant Disorder) போன்ற நிலையினால் பாதிக்கப்படலாம். இம்மாதிரியான நிலைகள் அந்த குழந்தைகளின் பேச்சுத்திறனை முதலில் பாதிக்கச் செய்யும். அவர்கள் சரளமாகத் தெளிவாகப் பேசுவது குறையும். இந்நிலையில். அவர்கள் மிகையியக்கமாக (Hyper activity) இருப்பதனால் கவனக் குறைவு ஏற்படும் அவர்களின் படிப்பு பாதிக்கும் இதனால். இதற்குத் தீர்வு பழகு முறை அல்லது நடத்தை சிகிச்சை (Behavioural Therapy)
இந்த பழகு முறை சிகிச்சை என்பது ஆட்டிசம் அல்லது ஏ.டி.ஹச்.டி போன்ற நிலைகள் மட்டுமன்றி ஒரு சாதாரன குழந்தையின் அனைத்து பழக்கங்களையும் வரைவாக்கச் செலவிடும் ஒரு கருவி. நேர்மறை வலுவூட்டல், எதிர்மறை வலுவூட்டல், டோக்கன் பொருளாதாரம், டயம் அவுட், வெகுமதி நுட்பங்கள் போன்ற வழிகள் மூலம் இந்த பழகு முறை சிகிச்சை நடைபெறும். நேர்மறை வலுவூட்டல் அல்லது எதிர்மறை வலுவூட்டல் என்பது ஒரு குழந்தையிடம் ஒரு வேலையைச் செய்தால் ஒரு பரிசு கிடைக்கும் என அவர்களின் ஆர்வத்தைத் தூண்டி அந்த வேலையைச் செய்ய வைப்பது. இதில் நேர்மறை வலுவூட்டலில் அந்த பரிசு அக்குழந்தைக்குக் காட்டப்பட்டு இருக்கும், அது அக்குழந்தைக்கு எப்படியானாலும் அந்த பரிசு நமக்குக் கிடைக்கும் என்னும் ஆர்வத்தைத் தூண்டும். ஆனால், எதிர்மறையில் குழந்தைக்கு பரிசு காட்டப்பட்டிருக்காது எனவே, நாம் இந்த வேலையைச் செய்யாவிட்டால் அந்த பரிசு நமக்குக் கிடைக்காது என்ற எண்ணத்தை உருவாக்கும். இப்படி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பலனைக் கொடுக்கும்.
இதுவே பதின்பருவ வயது குழந்தைகளுக்கு, அதாவது பன்னிரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அளிக்கும் சிகிச்சையின் பெயர் அறிவாற்றல் பழகு முறை (Cognitive Behavioral Therapy). பருவத்தில் வளர்த்து வரும் குழந்தைகளுக்குச் சமுதாய முதிர்ச்சி (Social Maturity) ஒன்று இருக்கும். அது அந்த பிள்ளையை ஒரு குழந்தையிடமிருந்து வித்தியாசப் படுத்தும். இந்த வயதில் அந்த குழந்தைக்கும் ஒரு எண்ணவோட்டம் ஒன்று இருக்கும். அதனால் பதின்பருவ குழந்தைகளுக்கு அவர்களின் நடத்தையைச் சீர் செய்வதற்கு அவர்களின் எண்ணம், உணர்வு மற்றும் பழக்கம் என மூன்றின் சீர்திருத்தமும் அவசியம்.
இந்த பழகு முறை சீர்திருத்தம் என்பது, 50:50 தான். அதாவது குழந்தைகளுக்கு அளிக்கும் சிகிச்சை ஒரு பாதி என்றால், பெற்றோர்களுக்கு அளிக்கும் சிகிச்சை வேறு பாதி. இதில் பெற்றோர்களுக்கும் கவுன்சலிங் மற்றும் சிகிச்சை அளிக்கப்படும். பிள்ளைகளைப் பார்க்கும் முழு பொறுப்பு பெற்றோறக்ளுடையது. மருத்துவர்கள் தருவது ஆலோசனை தான், மருந்து பெற்றோர்களிடத்தில் தான். உதாரணமாக ஒரு குழந்தை, சமுதாய முதிர்ச்சியின்றி, யாரிடமும் பழகாமல் இருந்தால் அது பல விஷயங்களைக் கற்கத் தவறிவிடும். ஒரு பட்டன் போடுவதில் தொடங்கி. இந்நிலையில் பெற்றோர்கள் அவர்கள் பிள்ளைகளுக்கு அந்த விஷயத்தை அவர்கள் புரியுமாறு பக்குவமாக எடுத்துச் சொல்லி அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
“அடிக்காத பிள்ளை படிக்காது” என்பது தவறு. ஒரு குழந்தை தவறு செய்து இருந்தாலும் அதற்கு அது தவறு என அபத்தமாகச் சுட்டிக் காட்டாமல், அந்த தவரின் விளைவு என்ன என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதனால் அவர்கள் அடையும் இழப்பு என்ன என உணர்த்தினால் குழந்தைகள் தாமாகவே அதைத் திருத்திக் கொள்வார்கள். குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் புரிய வைப்பதில் பெற்றோர்களின் பங்கு முக்கியம். ஒரு குழந்தை ஒரு வேலை செய்தால் இதன் விளைவு என இது யாரையாவது பாதிக்கும் என ஆராய்ந்து பெய்யுமளவிற்கு அக்குழந்தையைப் பக்குவப் படுத்த வேண்டும். அதே நேரத்தில் என் குழந்தை பாதிக்கப்பட்ட குழந்தை என அதிகமாகச் செல்லம் கொடுக்கவும் கூடாது.
“பிள்ளைக்கு அதிகமா செல்லம் கொடுத்துக் கெடுக்காதே ”
சுற்றிச் சுற்றிப் பெற்றோர்கள் கேட்கும் ஒரு அறிவுரை இது. இது மருத்துவரீதியாகவும் ஒரு உண்மையே.
“என் பிள்ளைக்கு நேரத்துக்குச் சாப்பாடு கொடுத்துருவேன்”
என்பது ஒரு வகையில் அந்த குழந்தையை எந்த விதத்திலும் தன்னை சுற்றி நடக்கும் எதையும் ஆராயாமல் வைக்கும் ஒரு செயல். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எல்லாவற்றையும் ஆராய விட வேண்டும். அவர்களை அடுத்த பிள்ளைகளோடு ஒப்பிடாது, அக்குழந்தைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு அவர்கள் பிள்ளைகளை ஊக்குவிக்கவேண்டும். பெற்றோர்கள் தான் பிள்ளைகளின் ஊக்கி. அவர்கள் முதலில் தங்கள் பிள்ளைகளை நம்ப வேண்டும். அவர்களின் மதிப்பெண்ணைத் தாண்டி இந்த உலகில் இருக்கும் அனைத்தையும் அவர்களை ரசிக்க வேண்டும். பிள்ளைகளைத் தோல்விகளை ஏற்றுக் கொண்டு தங்களுக்குப் பிடித்ததை முழு மனதோடு செய்து முடிக்கும் உத்வேகத்தைப் பெற்றோர்கள் அளித்தால் தான், ஆட்டிசம் மாதிரியான நிலைகளில் மட்டுமல்ல எந்த குழந்தையும் ஒரு ஆரோக்கியமான மனநிலையில் வளரும்.